/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் தேங்கி சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
கழிவுநீர் தேங்கி சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கழிவுநீர் தேங்கி சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கழிவுநீர் தேங்கி சாலை சேதம் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஏப் 02, 2024 12:39 AM

செங்குன்றம், கழிவுநீர் தேங்கி சேதமடைந்த புறவழிச்சாலை அணுகு சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை செங்குன்றம்அருகே, புள்ளிலைன் ஊராட்சியையொட்டிய, புறவழிச்சாலையின் அணுகுசாலையில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் இருந்து வெளியேறும், கழிவுநீர் குளமாக தேங்கி நிற்கிறது.
அதனால், அந்த சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகளை நிலைதடுமாற வைக்கிறது.
அதில் பயணிக்கும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், சேதமடைந்த சாலை பள்ளங்களால், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இரவில், பயணிக்கும் வாகன ஓட்டிகள், ஒருவர் பின் ஒருவராக விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. மேலும், அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களும் அவதிப்படுகின்றனர்.
நான்கைந்து மாதமாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண்பதில், உள்ளாட்சி அமைப்புகளும் அலட்சியம் காட்டுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வந்தால், இந்த பிரச்னையை எழுப்பப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

