/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலிலிருந்து வெளியேறி சாலையில் பாயும் கழிவுநீர்
/
வடிகாலிலிருந்து வெளியேறி சாலையில் பாயும் கழிவுநீர்
வடிகாலிலிருந்து வெளியேறி சாலையில் பாயும் கழிவுநீர்
வடிகாலிலிருந்து வெளியேறி சாலையில் பாயும் கழிவுநீர்
ADDED : ஆக 19, 2024 02:42 AM

சென்னை:அண்ணாசாலையில், மழைநீர் வடிகாலிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பாய்வதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையின் பிரதான சாலையான அண்ணாசாலையை, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். இச்சாலையில் எல்.ஐ.சி., அருகே, சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இந்த மழைநீர் வடிகாலில் சிலர், சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பை கொடுத்து உள்ளனர். இதனால் தற்போது, தினமும் வடிகாலிலிருந்து கழிவுநீர் வெளியேறி, சாலையில் பாய்கிறது.
இந்த கழிவுநீர், அருகே உள்ள ஜி.பி., சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.

