/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை சீரமைப்பு திட்டம் பருவமழைக்குள் முடிக்க கோரிக்கை
/
பாதாள சாக்கடை சீரமைப்பு திட்டம் பருவமழைக்குள் முடிக்க கோரிக்கை
பாதாள சாக்கடை சீரமைப்பு திட்டம் பருவமழைக்குள் முடிக்க கோரிக்கை
பாதாள சாக்கடை சீரமைப்பு திட்டம் பருவமழைக்குள் முடிக்க கோரிக்கை
ADDED : மே 20, 2024 01:51 AM

ஆலந்துார், ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லுார் பகுதிகளில் ஆங்காங்கே, பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சில ஆண்டுகளாக கழிவுநீர் வெளியேறியது.
இதனால், வீடுகளில் கழிவுநீர் திரும்பி, கழிப்பறை வழியாக வெளியேறி பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு முறையும் இப்பிரச்னை ஏற்படும்போதும் சீரமைக்க, 20 நாட்கள் வரை ஆனதால், சுற்று வட்டார மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கு தீர்வாக, ஆதம்பாக்கம் கூட்டுறவு நகரில் கூடுதலாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் கட்டப்பட்டது.
இருந்தும், இப்பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதையடுத்து, ஆலந்துார் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து மன்ற கூட்டத்திலும் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் விவாதித்தனர்.
தொடர்ந்து, ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் பிரதான குழாய்களை முழுமையாக மாற்றி சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக அரசு சார்பில், 124 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பருவமழைக்கு முன் பூமிபூஜை போடப்பட்டு ஒரு கி.மீ., துாரம் புதிய குழாய் புதைக்கும் பணி நடந்தது.
பருவ மழை துவங்கியதால் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கடந்த ஜன., மாதம் மீண்டும் துவக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மெத்தனப்போக்காலும், லோக்சபா தேர்தல் காரணத்தை காட்டியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
தற்போது பணிகள் துவங்கியுள்ளன. இம்முறை துவக்கிய பணியை இடைவிடாமல் செய்து, பருவமழைக்கு முன் முழுமையாக முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆலந்துார், ஆதம்பாக்கம், நங்கநல்லுார் பகுதி வாசிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-- நமது நிருபர் --

