/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தங்கும் விடுதியில் சிக்கிய பாலியல் தொழிலாளிகள்
/
தங்கும் விடுதியில் சிக்கிய பாலியல் தொழிலாளிகள்
ADDED : மார் 29, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சேப்பாக்கம், மியான் சாகிப் 1வது தெருவில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, இம்ரான், 26, நித்யானந்தன், 40, ஆகியோர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

