/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சங்கரா மருத்துவமனை கண் தானம் விழிப்புணர்வு
/
சங்கரா மருத்துவமனை கண் தானம் விழிப்புணர்வு
ADDED : செப் 05, 2024 01:56 AM

நங்கநல்லுார், நங்கநல்லுாரில் செயல்படும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையின் கிளை மருத்துவமனையில், 39வது தேசிய இரு வார கண்தான நிகழ்ச்சி நடக்கிறது.
இதை முன்னிட்டு, கண்தான விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. ராஜ்யசபா முன்னாள் எம்.பி., ஆர்.எஸ்.பாரதி துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொதுமக்களிடம் கண்தானம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரோட்டரி கிளப் மாவட்ட கவர்னர் ரவிசந்திரன், லயன்ஸ் கிளப் சிவகுமார், கருவிழி சிகிச்சை மருத்துவர் பாலமுருகன், சங்கரா கண் மருத்துவமனை திட்ட இயக்குனர் ஈஷ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சங்கரா கண் மருத்துவமனை பொது மேலாளர் முத்துகுமார் செய்திருந்தார்.