/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நம்பர் பிளேட்' விவகாரத்தில் புதுசு புதுசா யோசிக்க வேண்டாம் கடைகளுக்கு எச்சரிக்கை

ADDED : மே 04, 2024 12:23 AM
சென்னை, 'விதிகளை மீறி, வாகன பதிவு எண் தகடு விற்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஸ்டிக்கர் மற்றும் ஆட்டோமொபைல் கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர், வாகனங்களில், போலீஸ், ஊடகம் என, பல துறை சார்ந்த 'ஸ்டிக்கர்' ஒட்டி தப்பித்து விடுகின்றனர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதற்கட்டமாக, வாகன பதிவு எண் தகட்டில், போலீஸ் என, ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி வாகன பதிவு எண் தகடு விற்பனை செய்யும் ஆட்டோமொபைல் மற்றும் 'ஸ்டிக்கர்' கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்ட விதிகள், 50 மற்றும் 51ன்படி, வாகன பதிவு எண் தகடு மற்றும் எண்களின் அளவு குறித்து தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆட்டோமொபைல் மற்றும் ஸ்டிக்கர் கடைகளில், அரசியல் கட்சிகளின் நிறம், புதுசு புதுசா யோசிச்சு எழுத்து வடிவங்களில் எண்களை பதிவு செய்து, வாகன பதிவு எண் தகடு விற்பனை செய்கின்றனர். இது விதிமீறல் என, 138 கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.