/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் 'சிரிஞ்ச்' பற்றாக்குறையால் குழந்தைகள் தடுப்பூசி போடுவதில் சிக்கல்
/
தாம்பரத்தில் 'சிரிஞ்ச்' பற்றாக்குறையால் குழந்தைகள் தடுப்பூசி போடுவதில் சிக்கல்
தாம்பரத்தில் 'சிரிஞ்ச்' பற்றாக்குறையால் குழந்தைகள் தடுப்பூசி போடுவதில் சிக்கல்
தாம்பரத்தில் 'சிரிஞ்ச்' பற்றாக்குறையால் குழந்தைகள் தடுப்பூசி போடுவதில் சிக்கல்
ADDED : மார் 13, 2025 12:35 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, நான்காவது மண்டல அலுவலக நுழைவாயிலை ஒட்டி, நலவாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இங்கு கர்ப்பிணியருக்கான பரிசோதனை, தடுப்பூசி, குழந்தைகள் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
நேற்று புதன்கிழமை என்பதால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, காலை முதல் ஏராளமான பெற்றோர், குழந்தைகளுடன் நலவாழ்வு மையத்தில் குவிந்தனர்.
இந்நிலையில், தடுப்பூசி போட துவங்கியதும், மருந்து செலுத்தக்கூடிய ஊசி இல்லை. அதை வெளியில் வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து, பெற்றோர் நீண்ட துாரம் சென்று, செவிலியர் கேட்ட 0.5 அளவுள்ள சிரிஞ்ச்சை மருந்து கடைகளில் வாங்கி வந்தனர்.
அதன்பின், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பொதுவாக, தடுப்பூசி போடும் போது, சிரிஞ்ச், மருந்துகளை செவிலியர்களே எடுத்து வர வேண்டும். ஆனால், நேற்று வெளியில் வாங்கி வரும்படி கூறியது, பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரித்ததில், சிரிஞ்ச் போதிய அளவு கையிருப்பு இல்லாததால், பெற்றோரிடம் வாங்கி வரும்படி கூறியது தெரியவந்தது
சிரிஞ்ச்சை கொள்முதல் செய்து, தடுப்பூசி போடும் போது, போதிய அளவில் வழங்க வேண்டிய செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத் துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்களில், போதிய அளவில் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பிட்ட அளவு கொண்ட சிரிஞ்ச் இல்லாத காரணத்தால், வெளியில் வாங்கி வரும்படி கூறியுள்ளனர். பொது சுகாதாரத் துறைக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள், குறிப்பிட்ட சிரிஞ்ச்சுகளை அனுப்புவதாக கூறியுள்ளனர். மாவட்ட பொது சுகாதாரத் துறை தான், சிரிஞ்ச், மருந்துகளை வழங்குகிறது.
- சுகாதார துறை அதிகாரிகள்,
தாம்பரம் மாநகராட்சி.