/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு பஸ் நிலையத்தை பசுமை பூங்காவாக்க கையெழுத்து இயக்கம் பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

ADDED : ஆக 15, 2024 12:27 AM

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தில், பெரிய பசுமை பூங்கா அமைக்க கோரி, பசுமை தாயகம் அமைப்பு சார்பில், 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி, அரும்பாக்கத்தில் நேற்று நடந்தது.
அமைப்பின் முன்னாள் தலைவரும், பா.ம.க., தலைவருமான அன்புமணி, கையெழுத்து இயக்கத்தை துவங்கி பேசியதாவது:
கோயம்பேடு பஸ் நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டுமென, தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம். தமிழகத்தில், 1967ல் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தது முதல், இயற்கை வளங்களை அழித்து விட்டனர்.
குறிப்பாக சென்னையில், 250 ஏரிகளை அழித்து விட்டனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், ஏரியில் தான் கட்டினர். தற்போது அந்தப் பேருந்து நிலையத்தையும், கிளாம்பாக்கத்திற்கு மாற்றி விட்டனர். ஏரியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை, பெரிய பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும்.
'திராவிட மாடல்' என்ற பெயரில், 'அம்பாசிடர் கார்' போல், பழைய மாடல் ஆட்சியாக தான் உள்ளது.
கோயம்பேடில், 60 ஏக்கரில் பசுமை பூங்கா அமைத்தால், பல்வேறு பகுதி மக்கள் பயன் பெறுவர். அப்பூங்காவிற்கு, முதல்வரின் தந்தை பெயரைக் கூட வைத்துக் கொள்ளுங்கள். சுதந்திர தினத்தன்று, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.