ADDED : ஆக 17, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு, மதியம் 2:00 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட வேண்டும். இதில் முன்பதிவு செய்த 175 பேர் காலை 11:00 மணி முதல் காத்திருந்தனர். தொழில்நுட்ப காரணங்களுக்காக விமானம் சற்று தாமதமாக புறப்படும் என, விமான நிறுவனம் அறிவித்தது. சிங்கப்பூரில் இருந்து விமானம் தாமதாக புறப்பட்டு வந்ததால், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
பின், நான்கு மணி நேரம் தாமதமாக மாலை 5:50 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.