/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறு மழைக்கே சகதியாகும் சார் - பதிவாளர் ஆபீஸ் வளாகம்
/
சிறு மழைக்கே சகதியாகும் சார் - பதிவாளர் ஆபீஸ் வளாகம்
சிறு மழைக்கே சகதியாகும் சார் - பதிவாளர் ஆபீஸ் வளாகம்
சிறு மழைக்கே சகதியாகும் சார் - பதிவாளர் ஆபீஸ் வளாகம்
ADDED : ஆக 22, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லியில், சார் - பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், வரதராஜபுரம், பாரிவாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தின் வெளியே உள்ள காலி நிலத்தில், சிறு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால், இந்த அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை சீரமைக்க வேண்டும்.
-- என்.சக்திவேல், பூந்தமல்லி.