/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சார் - பதிவாளரை மிரட்டிய 'யு டியூபர்' வாராகி கைது
/
சார் - பதிவாளரை மிரட்டிய 'யு டியூபர்' வாராகி கைது
ADDED : செப் 14, 2024 12:21 AM
சென்னை, விருகம்பாக்கம், நடேசன் நகரிலுள்ள ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் வசித்து வருபவர் வாராகி, 50; யுடியூபர்.
சில மாதங்களுக்கு முன், மசாஜ் சென்டரில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இவரை, தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமினில் வெளியே வந்த இவர், தன் சமூக வலைதள பக்கத்தில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, சேலையூர் சார் - பதிவாளர்கள் குறித்து அவதுாறு கருத்துக்கள் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மயிலாப்பூரில் வசிக்கும் கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்தியலிங்கம், 46, நேற்று முன்தினம், வாராகி மீது புகார் அளித்தார்.
அதில், வாராகி சமூக வலைதளத்தில் என்னைப் பற்றி அவதுாறு பதிவிட்டு வருகிறார். அவரது கூட்டாளிகள், 10 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
புகாரின்படி மயிலாப்பூர் போலீசார், எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வாராகியை நேற்று கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இது போல் மேலும் பலர், வாராகியால் பாதிக்கப்பட்டிருப்பது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டோர், 044 - 23452324 / 25 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.