/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறைச்சி கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடல்
/
இறைச்சி கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை மூடல்
ADDED : ஏப் 18, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இறைச்சி கூடங்களை மூட, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்ட பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், நான்கு இறைச்சி கூடங்களும், வரும் 21ம் தேதி, மகாவீர் ஜெயந்தி அன்று மூடப்படுகின்றன.
அதேபோல், ஜெயின் கோவில்களில் இருந்து 328 அடி சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்த, வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

