/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிட்லபாக்கம் ஏரியில் மதகு பணி மும்முரம்
/
சிட்லபாக்கம் ஏரியில் மதகு பணி மும்முரம்
ADDED : மே 17, 2024 12:14 AM

சிட்லபாக்கம், தாம்பரம் மாநகராட்சி, சிட்ல;பபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கிவிட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலந்து, ஏரி நீர் மாசடைவதோடு, நிலத்தடி நீர் நாசமானது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ஏரியை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரி சீரமைப்பு பணி, 2019ல் துவங்கியது.
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி, ஆழப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது.
தற்போது, மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், நீர்மட்டத்தை அளவிடும் கருவி வைக்கும் வகையிலும், மதகாக பயன்படுத்தவும் அறை கட்டும் பணி நடந்து வருகிறது.

