ADDED : ஆக 25, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகர், -
'ஸ்மூல் பிரிசர்ஸ்' என்ற குழு, இசையில் ஆர்வமுள்ள பாடகர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இக்குழுவின் ஐந்தாவது ஆண்டு விழா நேற்று தி.நகரில் நடந்தது.
விழாவில் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாடல்கள் பாடிய குழு உறுப்பினர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த குழு 2019 முதல் சென்னை, பெங்களூரு மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் வழக்கமான இசை சந்திப்புகளை நடத்துவதுடன், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் விடுதி மற்றும் புற்றுநோய் மையங்களில், இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

