/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதை பணி கழிவுநீர் குழாய் உடைந்து சீர்கேடு
/
'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதை பணி கழிவுநீர் குழாய் உடைந்து சீர்கேடு
'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதை பணி கழிவுநீர் குழாய் உடைந்து சீர்கேடு
'ஸ்மார்ட் சிட்டி' நடைபாதை பணி கழிவுநீர் குழாய் உடைந்து சீர்கேடு
ADDED : ஆக 29, 2024 12:27 AM

வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பி.எஸ்.என்.எல்., ஜங்ஷன் துவங்கி, சிமென்ட்ரி சாலை ஜங்ஷன் வரை நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அப்பகுதியில் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி, மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள் செல்ல பிரத்யேக குழாய்கள், புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், மின் வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கின்றன.
கடந்த ஒரு மாதமாக, புதிதாக கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஜி.ஏ., சாலையில் இரண்டு நாட்களுக்கு முன் தோண்டப்பட்ட பள்ளத்தில், திடீரென குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறி பள்ளம் முழுதும் சூழ்ந்தது. கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வெளியேறிய நிலையில், துணிகளை வைத்து ஊழியர்கள் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று கழிவுநீர் குழாய் உடைந்து, பள்ளத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

