/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்
/
போதையில் தந்தை ரகளை 'பெல்ட்'டால் கவனித்த மகன்
ADDED : மார் 13, 2025 12:34 AM
திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகரன், 72. தலைமைக் காவலரான இவர், 2010ல் ஓய்வு பெற்றுள்ளார்.
மதுவுக்கு அடிமையான சேகரன், தினமும் மது குடித்து விட்டு, வீட்டில் ரகளை செய்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி, வழக்கம் போல் ரகளை செய்துள்ளார். அப்போது அவரின் மகன் தினகரன், 23, பெல்ட்டால் சேகரனை அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த சேகரன், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அப்போது, மகன் மது போதையில் அடித்துவிட்டதாகவும், நடவடிக்கை தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சேகரனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், அவரது மனைவி ராஜேஸ்வரி, 50, கணவனை அடித்த மகன் மீது, திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.