/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்னிந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அபாரம்
/
தென்னிந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அபாரம்
தென்னிந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அபாரம்
தென்னிந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அபாரம்
ADDED : ஆக 19, 2024 01:35 AM

சென்னை:தமிழ்நாடு வாலிபால் சங்கம் ஆதரவுடன், மரக்காணம், செட்டி நகர் வாலிபால் கிளப் சார்பில் தென்னிந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில், சென்னை, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அணி, தன் முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லுாரியை 25 - -23, 25 - -22 என்ற கணக்கில் வென்றது. அடுத்த ஆட்டத்தில் தமிழக போலீஸ் அணியை 25 - -22, 25 - -20 என்ற கணக்கில் வென்றது.
சாம்பியன் கோப்பையை நிர்ணயிக்கும் இறுதி லீக் ஆட்டத்தில், கேரள மாநிலம் செயின்ட் ஜார்ஜ் கல்லுாரியை எதிர்த்து களமிறங்கிய டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி அணி வீரர்கள், முதல் செட்டை 22 - -25 என்ற கணக்கில் இழந்தனர்.
சுதாரித்து, அடுத்தடுத்த செட்களில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி.ஜி.வைஷ்ணவ் மாணவர்கள், 25 - -11, 25- - 16 என்ற கணக்கில் கைப்பற்றி, சாம்பியன் கோப்பையை வென்றனர்.