/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளையாட்டு செய்தி -- டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவல் வெற்றி
/
விளையாட்டு செய்தி -- டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவல் வெற்றி
விளையாட்டு செய்தி -- டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவல் வெற்றி
விளையாட்டு செய்தி -- டிவிஷன் கிரிக்கெட் லீக் பிரண்ட்ஸ் லெவல் வெற்றி
ADDED : செப் 07, 2024 12:18 AM

சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கின்றன.
அதன்படி, ஐந்தாவது டிவிஷன் 'பி' மண்டல போட்டியில், முதலில் பேட்டிங் செய்த, பிரண்ட்ஸ் லெவல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 286 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, அமர் சி.சி., அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து, 167 ரன்கள் மட்டுமே அடித்து, 119 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பிரண்ட்ஸ் லெவல் வீரர் கவுதம், ஐந்து விக்கெட் எடுத்து 44 ரன்களை கொடுத்தார்.
மற்றொரு போட்டியில், எம்.ஆர்.சி., 'பி' அணி, 42 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 171 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய, ஏர் இந்தியா எஸ்.சி., அணி, 26.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 90 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது. எம்.ஆர்.சி., வீரர் பிரதாப், ஐந்து விக்கெட் எடுத்து, 42 ரன்களை கொடுத்தார்.
அடுத்த போட்டியில் முதலில் விளையாடிய, நெஷவல் ஆர்.சி., அணி, 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 79 ரன்கள் அடித்தது. எதிர் அணி வீரர் ஆஸ்டின் ராஜ், ஐந்து விக்கெட் எடுத்து, 19 ரன்கள் மட்மே கொடுத்தார்.