/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுழல்முறை செஸ் தெலுங்கானா வீரர் முன்னிலை
/
சுழல்முறை செஸ் தெலுங்கானா வீரர் முன்னிலை
ADDED : ஆக 04, 2024 12:36 AM

சென்னை,
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 22வது மாநில ஐ.எம்., நார்ம்ஸ் சர்வதேச சுழல் முறை செஸ் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டி, தமிழக வீரர்களை சர்வதேச வீரர்களாக்குவதற்காக நடத்தப்படுகிறது.
சென்னையில் இரண்டு கட்டமாக நடந்து வரும் இப்போட்டியின் எட்டாவது சுற்று, நேற்று நிறைவடைந்தது.
அதில், தெலுங்கானா வீரர் ஆதிரெட்டி ஆர்ஜுன் - ரஷ்யா வீரர் அலேக்சாண்டர் மோதிய ஆட்டம், சமநிலையில் முடிந்தது. இதனால், தெலுங்கானா வீரர் ஆதிரெட்டி ஆர்ஜுன், 6.5 புள்ளிகள் முன்னிலையை தக்கவைத்து, தொடரின் இரண்டாவது சர்வதேச மாஸ்டர் நெறியை அடைந்தார். மற்றொரு போட்டியில், தமிழக வீரர் ஹர்ஷத், மஹாாராஷ்டிரா வீரர் வேதாந்த் நாகர்கட்டே என்பவரை தோற்கடித்து, 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை தக்க வைத்தார்.
தொடர்ந்து, ரஷ்யா வீரர் அலேக்சாண்டர் 5.5 புள்ளிகளில் மூன்றாம் இடத்தில் உள்ளனர். போட்டிகள் இன்றும் நடக்கின்றன.