/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீ ஜெயந்தி இசை விழா 24ல் துவக்கம்
/
ஸ்ரீ ஜெயந்தி இசை விழா 24ல் துவக்கம்
ADDED : ஆக 17, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஸ்ரீ தியாக பிரம்மா கான சபா மற்றும் இந்தோ நேஷனல் லிமிடட் இணைந்து நடத்தும், 13வது ஸ்ரீ ஜெயந்தி இசை விழா, தி.நகரில் உள்ள வாணிமஹாலில் வரும் 24ம் தேதி, மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது.
முதல்நாள் விழாவை, சிட்டி யூனியன் வங்கி அறக்கட்டளையின் தலைவர் பாலசுப்ரமணியன் துவங்கி வைக்கிறார். அதேநாளில், வயலின் வெங்கடசுப்ரமணியன், மிருதங்கம் சுதீதந்திரன், பரதநாட்டியம் பினேஷ் மகாதேவன் உள்ளிட்டோருக்கு 'வாணி கலா நிபுனா' என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இசை விழா தொடர்ந்து. செப்., 9ம் தேதி வரை நடக்கிறது.

