/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்' வாலிபால் பைனலில் த்ரில் வெற்றி
/
செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்' வாலிபால் பைனலில் த்ரில் வெற்றி
செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்' வாலிபால் பைனலில் த்ரில் வெற்றி
செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்' வாலிபால் பைனலில் த்ரில் வெற்றி
ADDED : செப் 02, 2024 01:45 AM

சென்னை:சென்னை, கெல்லீஸ் சிந்தி மாடல் ஸ்கூல் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், பள்ளி மைதானத்தில் நடந்தன.
இதில், செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், சேது பாஸ்கரா, வேலம்மாள், செயின்ட் பீட்டர்ஸ், கோலா சரஸ்வதி, ஆர்.எம்.கே., - ஒய்.எம்.சி.ஏ., சிந்தி, டான் பாஸ்கோ உள்ளிட்ட 26 பள்ளி அணிகள் பங்கேற்றன.
அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு, 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டிக்கு ஒய்.எம்.சி.ஏ., மற்றும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில் முதல் செட் ஆட்டத்தை 25 - -21 என்ற புள்ளி கணக்கில் செயின்ட் பீட்ஸ் பள்ளி அணியினர் வென்றனர். சுதாரித்த ஒய்.எம்.சி.ஏ., அணியினர் அடுத்த செட் ஆட்டத்தை -25 - -16 என, வென்று அசத்தினர்.
இதனால், மதில் மேல் பூனை என்ற வகையில், யாருக்கு வெற்றி என்பது கணிக்க மூன்றாவது செட்டிற்கு ஆட்டம் நகர்ந்தது.
பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பிற்கு இடையே, மூன்றாவது செட்டை செயின்ட் பீட்ஸ் அணியினர், 25- - 19 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, கோப்பையை வென்றனர்.