/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண 'ஐடியா' கேட்கும் ஸ்டார்ட் அப் டி.என்.,
/
போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண 'ஐடியா' கேட்கும் ஸ்டார்ட் அப் டி.என்.,
போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண 'ஐடியா' கேட்கும் ஸ்டார்ட் அப் டி.என்.,
போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண 'ஐடியா' கேட்கும் ஸ்டார்ட் அப் டி.என்.,
ADDED : மார் 13, 2025 11:51 PM
சென்னை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான, 'கும்டா' மற்றும் தமிழக புத்தொழில், புத்தாக்க இயக்கமான ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், சென்னை மாநகர போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க, 'நகர்ப்புற நகர்வு' என்ற புத்தாக்க சவாலை துவக்கியுள்ளது.
இது, பொது போக்குவரத்து சார்ந்த துல்லியமான தகவல் இல்லாதது, தனியார் வாகனங்களின் பெருக்கம் காரணமாக அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பொது உள்கட்டமைப்பு மற்றும் சாலைகள் நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த தரவுதளம் இல்லாதது உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து சிக்கல்களை தீர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த சவாலில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், போக்குவரத்து நிபுணர்கள், செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்கள், ஜி.ஐ.எஸ்., வல்லுநர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம்.
இதில், சென்னை பொது போக்குவரத்திற்கான திறந்த நிலை வலைதள வரைபட உருவாக்குவதல், செயலி இல்லாத பொது போக்குவரத்து பயணச்சீட்டு வினியோக முறையை உருவாக்குதல், ஏ.ஐ.,யை பயன்படுத்தி மொபைல் போன் வாயிலாக போக்குவரத்து சார்ந்த நகர்ப்புற உள்கட்டமைப்பு தகவலை சேகரித்தல் உள்ளிட்ட தீர்வு காணலாம்.
அதேபோல், போக்குவரத்து மேலாண்மைக்கு உதவ செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வாகன போக்குவரத்து தகவல்களை சேகரித்தல், 'ஆக்மென்ட் ரியாலிட்டி' தொழில்நுட்பம் பயன்படுத்தி செயலி வாயிலாக உள்கட்டமைப்பு வழிமுறை சார்ந்த தகவல்களை சேகரித்தல் ஆகிய பிரிவுகளில் தீர்வுகளை அளிக்கலாம்.
இதில் பங்கேற்க விரும்புவோர் வரும், 28ம் தேதிக்குள், ' https://cumta.tn.gov.in/openinnovationchallenge' இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புத்தாக்க சவாலில் வெற்றிபெறுவோருக்கு, நிறுவனம் துவங்க ஆதரவு, வழிகாட்டுதல், வாய்ப்பு, அரசு துறைகளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சியில், 'கும்டா' உறுப்பினர் செயலர் ஜெயக்குமார், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் பங்கேற்றனர்.
*