ADDED : ஆக 03, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சியோன் ஆல்வின் குருப் ஆப் இன்ஸ்டிடியூட் மற்றும் மவுண்ட் செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான முதலாவது மாநில செஸ் போட்டி நாளை நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கத்தின் ஆதரவில் நடக்கும் இப்போட்டிகள், சேலையூர், இந்திரா காந்தி நகரில் உள்ள ஆல்வின் பப்ளிக் பள்ளியில் நடக்கிறது.
இதில், எட்டு, 10, 12, 14 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டோரில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. 'பிடே ராபிட் ரேட்டிங்' அடிப்படையில், சுவிஸ் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
இருபாலரிலும் வெற்றி பெறும் முதல் 15 பேருக்கு கோப்பைகள் வழங்கப்பட உள்ளன என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.