/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கால்பந்து போட்டி செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
/
மாநில கால்பந்து போட்டி செயின்ட் ஜோசப் 'சாம்பியன்'
ADDED : செப் 04, 2024 01:37 AM

சென்னை:மாநில அளவிலான கால்பந்து போட்டியில், செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி சார்பில், மாநில அளவிலான கால்பந்து போட்டி, கோவையில் கடந்த இரு நாட்களாக நடந்தது. இதில், மொத்தம் 17 அணிகள் பங்கேற்று, 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதின.
'நாக் அவுட்' சுற்றில் செயின்ட் ஜோசப் அணி, 5 - 0 என்ற கணக்கில் எஸ்.என்.எஸ்., அணியையும், 4 - 0 என்ற கணக்கில் ரத்னம் அணியையும் தோற்கடித்தது.
'லீக்' சுற்றில், செயின்ட் ஜோசப் அணி, 2 - 1 என்ற கணக்கில் அதியமான் கல்லுாரியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில், செயின்ட் ஜோசப் அணி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணியுடன் மோதி, 1 - 1 என்ற கணக்கில் டிரா செய்தது.
அனைத்து 'லீக்' போட்டிகள் முடிவில், சென்னை செயின்ட் ஜோசப் இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒன்றில் 'டிரா'வும் செய்து, ஏழு புள்ளிகள் பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி அணி, ஒரு போட்டியில் வெற்றியும், இரண்டில் 'டிரா'வும் செய்து, ஐந்து புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. ஓசூர் அதியமான கல்லுாரி அணி, நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது.