/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் வேளச்சேரியில் இன்று துவக்கம்
/
மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் வேளச்சேரியில் இன்று துவக்கம்
மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் வேளச்சேரியில் இன்று துவக்கம்
மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் வேளச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 12:48 AM
சென்னை, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில், 40வது சப் - ஜூனியர், 50வது ஜூனியருக்கான மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில், இன்று துவங்கி நாளை மறுநாள் வரை நடக்கிறது.
இதில், 15 - 17 வயதுக்கு குரூப் 1; 12 - 14 வயதுக்கு குரூப் 2; 10 - 11 வயது வரை குரூப் 3 ஆகிய மூன்று பிரிவுகளாக, போட்டிகள் நடக்கின்றன.
சென்னை உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
இந்தாண்டில் முதல் முறையாக, மன வளர்ச்சி குன்றியோருக்கான மாநில நீச்சல் போட்டி, இறுதி நாளான நாளை மறுநாள் நடக்கிறது. இதில் ஒரு வீரர், மூன்று பிரிவிலும் பங்கேற்கலாம்.
மாநில போட்டியில் வெற்றி பெறுபவர், வரும் ஆக., 6 முதல் 11ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணியில் இடம்பெறுவர் என, மாநில நீச்சல் சங்கத்தினர் தெரிவித்தனர்.

