/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆவின்' பால் 'டிரே'யுடன் திருட்டு
/
'ஆவின்' பால் 'டிரே'யுடன் திருட்டு
ADDED : மே 29, 2024 12:18 AM

ஆவடி,
ஆவடி பட்டாபிராம் காவல் நிலையம் அருகே மலர்விழி, 58, என்பவர், பட்டாபிராம் அனைத்து மகளிர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணி அளவில், வழக்கம்போல், 'பிளாஸ்டிக் டிரே'யுடன் ஆவின் பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்டன. காலை மலர்விழி கடைக்கு சென்று பார்த்தபோது, நான்கு டிரேயில் இருந்த, 30 ரூபாய் மதிப்பிலான 50 'ஆரஞ்சு' ஆவின் பால் பாக்கெட் மாயமாகி இருந்தன.
கடையில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர், 'குட்டி யானை' எனும் சிறிய வேனில் ஏற்றிச் செல்வது பதிவாகி இருந்தது.
பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த 20ம் தேதி, பட்டாபிராம், பாபு நகரில் உள்ள ஸ்ரீகுமார் என்பவரின் கடையில், ஐந்து டிரே ஆரஞ்சு ஆவின் பால் பாக்கெட் மற்றும் ஒரு டிரே பச்சை நிற பால் பாக்கெட் என, 144 பால் பாக்கெட்டுகள் மாயமாகி இருந்தன.
திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில் உள்ள ஆவின் முகவர் சரவணன் என்பவரின் கடையில், கடந்த 20ம் தேதி, 120 பால் பாக்கெட்டுகள் மாயமாகி இருந்தன.
தொடர் சம்பவங்கள் வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்துளள்ளது.