/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டமாக திரியும் தெருநாய்கள் வில்லிவாக்கத்தில் நடமாட அச்சம்
/
கூட்டமாக திரியும் தெருநாய்கள் வில்லிவாக்கத்தில் நடமாட அச்சம்
கூட்டமாக திரியும் தெருநாய்கள் வில்லிவாக்கத்தில் நடமாட அச்சம்
கூட்டமாக திரியும் தெருநாய்கள் வில்லிவாக்கத்தில் நடமாட அச்சம்
ADDED : மே 29, 2024 12:36 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதியில், தெரு நாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதால், குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியடைகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து விட்டன.
அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம் பகுதிகளில் பிரதான சாலை உட்பட தெருக்களில், நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே நடமாடுகின்றனர்.
குறிப்பாக, 95வது வார்டு வில்லிவாக்கத்தில், அகத்தியர் நகர், குமாரசாமி நகர், ராமகிருஷ்ணாபுரம், லட்சுமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதிகளில் வசிப்போர் கூறியதாவது:
வில்லிவாக்கத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் சிறியோர், பெண்கள், வாகன ஓட்டிகளை விரட்டிக் கடிக்கின்றன. குடியிருப்பில் நிறுத்தப்பட்ட 'பைக்'கின் இருக்கைகளை கடித்துக் குதறி வைக்கின்றன.
நாய்கள் வாகன ஓட்டிகள், பாதசாரிகளை விரட்டுவதும், ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு பொதுமக்களை கடிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, இரவில் பணி முடிந்து, இருசக்கர வாகனத்தில் திரும்புவோர் மற்றும் பாதசாரிகளை நாய்கள் விரட்டுவது மட்டுமல்லாமல், கடிக்க முயல்கின்றன.
இதனால், அவர்கள் நிலைதடுமாறி கிழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, சம்பந்தப்பட்ட பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.