/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடர் மின் வெட்டு எண்ணுாரில் மறியல்
/
தொடர் மின் வெட்டு எண்ணுாரில் மறியல்
ADDED : மே 15, 2024 12:35 AM
எண்ணுார், எண்ணுார், அன்னை சிவகாமி நகரில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
ஒரு வாரமாக இரவில், அன்னை சிவகாமி நகரில் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால், குழந்தைகள், முதியோர் துாக்க முடியாமல் பெரிதும் அவதியடைந்து வந்தனர். மின் வாரியத்தில் தொடர் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அன்னை சிவகாமி நகர் மக்கள் 100க்கும் மேற்பட்டோர், எண்ணுார் நெடுஞ்சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர்.
மின்வாரிய உதவிப் பொறியாளர் புண்ணியக்கோட்டி வந்து, மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தி, 'இனி மேல் மின்வெட்டு ஏற்படாது' என உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
அயனாவரம் பகுதியில், புதுநகர், சி.கே., சாலை, மேட்டுத்தெரு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில், காலை முதல் இரவு வரை, தொடர்ந்து பலமுறை மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து, மின்வாரியத்தில் புகார் அளித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், அயனாவரம் பிரதான சாலையில் நேற்று மாலை, மறியலில் ஈடுபட்டனர். அயனாவரம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து, மக்களிடம் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

