/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓடும் ரயிலில் இருந்து விழுந்த மாணவர் பலி
/
ஓடும் ரயிலில் இருந்து விழுந்த மாணவர் பலி
ADDED : மே 14, 2024 12:59 AM

எண்ணுார், எண்ணுார், காமராஜர் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகமது நாசர், வெளிநாட்டில் பணி புரிகிறார். இவரது மகன் முகமது நபில், 17. பிளஸ் 2 முடித்த இவர், ஆவடியில் உள்ள தனியார் கல்லுாரி சேர விரும்பினார்.
இதற்கான விண்ணப்பம் பெறுவதற்காக, மின்சார ரயிலில் செல்ல எண்ணுார் ரயில் நிலையத்திற்கு, நேற்று காலை சென்றார். அப்போது, திருவள்ளூர் போக கூடிய ரயிலில் ஏறுவதற்கு பதிலாக, சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஏறி விட்டார்.
பின், சுதாரித்தவர் மெதுவாக சென்ற ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தார். அப்போது, எதிர்பாராவிதமாக தவறி கீழே விழுந்தவர், ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
கல்லுாரியில் சேருவதற்காக விண்ணப்பம் வாங்க சென்ற வாலிபர், மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

