/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்
/
பஸ் கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்
ADDED : மே 08, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவல்லிக்கேணி, திரு.வி.க.நகரில் இருந்து -விவேகானந்தர் இல்லம் செல்லும், 'தடம் எண்: 38சி' மாநகர பேருந்து, நேற்று மாலை சென்ட்ரல் அருகில் சென்றது. அப்போது, பேருந்தின் கூரையில் ஏறி கல்லுாரி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
சென்ட்ரல் அருகில் உள்ள மேம்பாலத்தில் பேருந்தை நிறுத்த மாணவர்கள் வற்புறுத்தினர். பின், கூரையில் இருந்து முன்பக்க கண்ணாடி வழியாக, மாணவர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக கீழே குதித்து, கூச்சலிட்டபடி தப்பினர்.
இந்த சம்பவம், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.
இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

