ADDED : செப் 05, 2024 01:57 AM

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லுாரி செயல்படுகிறது.
இக்கல்லுாரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று, கல்லுாரி வளாகத்திற்குள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரை சந்திப்பதற்காக, அவரது அலுவலகம் சென்றனர். அப்போது, கீழே கிடந்த கற்களால் அலுவலக ஜன்னல் கண்ணாடியை உடைத்து, கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. தகவலறிந்து கீழ்ப்பாக்கம் போலீசார் வந்ததும், மாணவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவர்கள் கூறுகையில், 'கல்லுாரி 'பிளாக்'களில் போதிய கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. கண்டிப்பு என்ற முறையில், மாணவர்களை கைதிகளை போல் நடத்துகின்றனர்.
'விடுதியில் கடந்த ஆண்டைவிட கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனர். கல்வி வளாக ஜனநாயகத்தை பறிக்கும் வகையில் நிர்வாகம் செயல்படுகிறது. எதிர்த்து கேள்வி கேட்டால் 'டிஸ்மிஸ்' செய்கின்றனர்' என்றனர்.