/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவியர் அவதி
/
சாலையை கடக்க முடியாமல் மாணவ, மாணவியர் அவதி
ADDED : ஆக 01, 2024 01:01 AM

வேளச்சேரி விரைவு சாலையில் சிக்னல் இல்லாமல், சாலை மைய தடுப்பு திறக்கப்பட்டு உள்ளது. இதில், அந்த சுற்றுவட்டார வாகன ஓட்டிகள், பிரதான சாலையில் இருந்து திரும்பிச் செல்கின்றனர்.
இந்த பகுதியில், அரசு, தனியார் என, நான்கு பள்ளிகள் உள்ளன. காலை, மாலையில் இந்த சாலை வழியாக மாணவர்கள் செல்கின்றனர். சில நேரம், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், மாணவ, மாணவியர் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மாணவர்கள் விபத்தில் சிக்கி, லேசான காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
எனவே, பள்ளி நேரத்தில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, மாணவ, மாணவியர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சுப்பிரமணியன், 48, வேளச்சேரி.