/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'நாட்டார்குளம்' பெயர் திடீர் மாற்றம் வேளச்சேரியில் எதிர்ப்பு
/
'நாட்டார்குளம்' பெயர் திடீர் மாற்றம் வேளச்சேரியில் எதிர்ப்பு
'நாட்டார்குளம்' பெயர் திடீர் மாற்றம் வேளச்சேரியில் எதிர்ப்பு
'நாட்டார்குளம்' பெயர் திடீர் மாற்றம் வேளச்சேரியில் எதிர்ப்பு
ADDED : ஆக 22, 2024 12:44 AM

வேளச்சேரி, அடையாறு மண்டலம், 177வது வார்டு வேளச்சேரியில், 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாட்டார்குளம் உள்ளது.
இதில் கட்டட கழிவு, குப்பையை கொட்டி, சிலர் ஆக்கிரமிக்க முயன்றனர். கடந்த 2019ல் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, நீர்நிலைகளை பாதுகாக்க 'நம் நாளிதழ்' முன்வந்தது. அதன்படி, 'களமிறங்குவோம்... நமக்கு நாமே' என, பொதுநல சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் நீர்நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என, நம் நாளிதழில் விழிப்புணர்வு செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து, வேளச்சேரியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், நாட்டார் குளத்தை துார் வாரி, 10 அடி ஆழப்படுத்தி சீரமைத்தனர். அதன் பின், 2020 பருவமழைக்கு குளம் நிரம்பியதால், வேளச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 'நமக்கு நாமே' திட்டத்தில் மாநகராட்சி, 55 லட்சம் ரூபாயில் குளத்தை ஆழப்படுத்தி, கடந்த மாதம் புதுப்பித்தது.
ஆனால், முன்னறிவிப்பின்றி 'நாட்டார்குளம்' என்ற பெயரை, 'ஜெகநாதபுரம் குளம்' என பெயர் மாற்றம் செய்துள்ளனர். இதற்கு, வேளச்சேரிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நலச்சங்கங்கள் கூறியதாவது: பல தலைமுறைகளாக அழைத்த 'நாட்டார்குளம்' என்ற பெயரை, குளத்தை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் மாற்றியுள்ளனர். பொதுமக்களிடம் கருத்து கேட்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மாநகராட்சி பதிவேட்டில் நாட்டார்குளம் என்று தான் உள்ளது. பல தரப்பில் இருந்த எதிர்ப்பு வந்ததால், பழைய பெயரை எழுத முடிவு செய்துள்ளோம்' என்றனர்.