/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு
/
மத்திய சிறை கைதி திடீர் உயிரிழப்பு
ADDED : மே 13, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:சென்னை ஐ.சி.எப்.,பைச் சேர்ந்தவர் ராஜா, 61. இவர், கடந்த மார்ச் மாதம், 'போக்சோ' வழக்கில், கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார்.
காசநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர், ஏப்., 18ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.