/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருங்காட்டுக்கோட்டையில் சேதமான சாலையால் அவதி
/
இருங்காட்டுக்கோட்டையில் சேதமான சாலையால் அவதி
ADDED : ஆக 20, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை - அமரம்பேடு நெடுஞ்சாலை வழியாக சிப்காட் தொழிற்பூங்கா, காட்டரம்பாக்கம், குன்றத்துார் பகுதிகளுக்கு தினமும் வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையை இணைக்கிறது.
நீளம் 10 கி.மீ., உள்ள இந்த சாலையில், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சியில் 800 மீட்டர் நீளத்திற்கு சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
- பொன்ராஜ், இருங்காட்டுக்கோட்டை.