ADDED : மே 21, 2024 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் மலை மீது, பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த மலையடிவாரத்தின் கீழ் நத்தம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள காலி நிலத்தில், மர்ம நபர்கள் இரவு நேரத்தில் தொழிற்சாலை கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகளை கொட்டி, தீ வைத்து எரிக்கின்றனர்.
இதிலிருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் புகை, குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் சுவாச பிரச்னை ஏற்படுகிறது. கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது, குன்றத்துார் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்

