/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை வெட்டி வழிப்பறி சூளைமேடு ரவுடிகள் கைது
/
வாலிபரை வெட்டி வழிப்பறி சூளைமேடு ரவுடிகள் கைது
ADDED : மே 30, 2024 12:16 AM

சூளைமேடு, நடந்து சென்ற வாலிபரை கத்தியால் வெட்டி மொபைல்போன், பணப்பையை பறித்த ரவுடிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஹேமநாதன், 30. இவர் இரு நாட்களுக்கு முன், மின்சார ரயிலில் நுங்கம்பாக்கம் வந்தார். அங்கிருந்து சூளைமேடு, நமச்சிவாயபுரம் மேம்பாலம் பகுதியை நோக்கி நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த இருவர், கையில் இருந்த மொபைல் போனை பறிக்க முயன்றனர்.
அவர் சத்தம் போடவே, மர்ம நபர்கள் கத்தியால் கை உள்ளிட்ட இடங்களில் அவரை வெட்டிவிட்டு மொபைல்போன், மணிபர்சை பறித்துக் கொண்டு தப்பினர்.
காயமடைந்த ஹேமநாதனை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து, சூளைமேடு போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான கரண்குமார், 23, விக்னேஷ், 23, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2,600 ரூபாய், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை சிறையில் அடைத்தனர்.