/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவப்பு மண்டல பகுதியில் 'ட்ரோன்'கள் கண்காணிப்பு
/
சிவப்பு மண்டல பகுதியில் 'ட்ரோன்'கள் கண்காணிப்பு
ADDED : மே 03, 2024 12:26 AM
சென்னை, சென்னையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் அருகே, 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்லை ஒட்டி, சென்னையில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நுங்கம்பாக்கம் லயோலா கல்லுாரி, மயிலாப்பூர் ராணி மேரி கல்லுாரி, கிண்டி அண்ணா பல்கலை ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த இடங்களில், ஜூன், 4 வரை, ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனினும், ட்ரோன் பறக்கவிடப்படுகிறதா என்பது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தடையை மீறுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.