ஆன்மிகம்
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா குழு சார்பில், 34வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி பெருவிழா.
காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தீபாராதனை. இடம்: மண் வளம் காக்கும் மஹா விநாயகர் கோவில், சிவன் கோவில் அருகில், வளசரவாக்கம்.
காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. மாலை 6:30 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் வீதி உலா. இடம்: ரத்தின விநாயர் மற்றும் துர்க்கையம்மன் ஆலயம், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
பிரகாச கணபதிக்கு, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4:00 மணிக்கு வீதி ஊர்வலம். இடம்: சிவா விஷ்ணு ஆலயம், 8வது குறுக்கு தெரு, பிரகாஷ் நகர், திருநின்றவூர்.
காலை 8:00 மணிக்கு மஹா அபிஷேகம். இரவு: 7:00 மணிக்கு நுாதன பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா. இடம்: சந்தன விநாயகர் கோவில், சடையப்ப முதலியார் தெரு, மாம்பலம், தோப்பேட்டை கிராமம், சைதாப்பேட்டை.
ஹேரம்ப கணபதிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி, இடம்: கமல் சித்தி விநாயகர் கோவில், மகாலட்சுமி நகர், சேலையூர்.
அபிஷேக, அலங்கார ஆராதனை, காலை 6:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கல்லுாரி சாலை, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.
விநாயகர் வீதியுலா, மாலை 6:00 மணி. இடம்: நாகாத்தம்மன் கோவில், அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
மஹா அபிஷேக அலங்கார ஆராதனை, காலை 7:00 மணி. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், பிரதான சாலை, மின்சார வாரியம் அலுவலகம் எதிரில், வேளச்சேரி.
சொற்பொழிவு
சொற்பொழிவு நிகழ்த்துபவர் புருஷோத்தமன், தலைப்பு: 'அருகம்புல்லும் ஐங்கரனும்' - காலை 6:00 மணி. சந்தனக்காப்பு மற்றும் வீதியுலா - மாலை 6:00 மணி. இடம்: மகா சங்கடஹர கணபதி கோவில், முதல் தெரு, வி.ஜி.பி., சாந்தி நகர், பள்ளிக்கரணை.
பொது
சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலையம் வழங்கும், ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விருது விழா. மாலை 5:00 மணி. இடம்: கிரெசன்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை, நுங்கம்பாக்கம் - 34.
கணபதி தர்ஷன் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் விற்பனை, -காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம். அண்ணா சாலை மற்றும் சி.பி.ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை.
இன்னிசை விழா
'நிப்போ இண்டோ நேஷனல் லிமிடெட்' வழங்கும், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 13வது ஜெயந்தி இன்னிசை திருவிழா. மாலை 4:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை 6:30க்கு வாத்தியக் கச்சேரி. இடம்: வாணி மஹால், தி.நகர்.