/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 10' கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி 'சாம்பியன்'
/
'டி - 10' கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி 'சாம்பியன்'
'டி - 10' கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி 'சாம்பியன்'
'டி - 10' கிரிக்கெட் போட்டி சர் முத்தா பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஏப் 28, 2024 01:01 AM

சென்னை:சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான டி - 10 கிரிக்கெட் போட்டி, கடந்த 23ம் தேதி துவங்கியது. இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.
அரையிறுதிக்கு முகப்பேர் சென்னை பப்ளிக், சேத்துப்பட்டு சர் முத்தா, மயிலாப்பூர் பி.எஸ்.எஸ்., மற்றும் வியாசர்பாடி அகர்வால் வித்யா ஆகிய நான்கு அணிகள் முன்னேறின.
முதல் அரையிறுதியில் சென்னை பப்ளிக் பள்ளி அணியை, 9 விக்கெட் வித்தியாசத்தில் சர் முத்தா பள்ளி அணி வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் அகர்வால் வித்யா அணியை, பி.எஸ்.எஸ். பள்ளி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இதையடுத்து, சர் முத்தா பள்ளி அணியும், பி.எஸ்.எஸ்., பள்ளி அணியும் இறுதிப்போட்டியில், பலப்பரீட்சை நடத்தின.
இதில், முதலில் பேட் செய்த சர் முத்தா பள்ளி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் குவித்தது.
அணி வீரர்கள் ஹரண், அன்ஸ்பாதிஜா முறையே ஆட்டமிழக்காமல் 28 மற்றும் 27 ரன்கள் குவித்தனர்.
அடுத்து களமிறங்கிய பி.எஸ்.எஸ்., பள்ளி 4 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சர் முத்தா பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கு, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் திருப்பூர் அணி வீரர் முகமது அலி கோப்பை, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
எம்.சி.சி., பள்ளி தாளாளர் மனோகர், முதல்வர் மாத்யூ உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

