/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சாப்ட் பால் தமிழக வீரர்கள் தேர்வு
/
தேசிய சாப்ட் பால் தமிழக வீரர்கள் தேர்வு
ADDED : மார் 29, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தேசிய அளவிலான சாப்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி, மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று துவங்கி, ஏப்., 1ம் தேதி வரை நடக்கிறது. போட்டியில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், தமிழ்நாடு சாப்ட் பால் சங்கம் சார்பில், இருபாலரிலும் தலா 16 பேர் பங்கேற்கின்றனர். தமிழக அணியில், சென்னையைச் சேர்ந்த சக்தி, சுஜீத், ஹரிகிருஷ்ணன், பிரபந்தனா, மினிஷா, அனன்யா ஆகிய வீரர் - வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

