/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கத்தில் ௶'டாஸ்மாக்' பஸ் பயணியர் அதிர்ச்சி
/
கிளாம்பாக்கத்தில் ௶'டாஸ்மாக்' பஸ் பயணியர் அதிர்ச்சி
கிளாம்பாக்கத்தில் ௶'டாஸ்மாக்' பஸ் பயணியர் அதிர்ச்சி
கிளாம்பாக்கத்தில் ௶'டாஸ்மாக்' பஸ் பயணியர் அதிர்ச்சி
ADDED : ஆக 28, 2024 12:24 AM
சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கருணாநிதி நுாற்றாண்டு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இங்கு, 3,500 பேருந்துகள் வந்து செல்லும் வகையில், 363.71 கோடி ரூபாயில் கட்டப்பட்டது. நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், பேருந்து நிலையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க, டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் எதிரே, 180 மீட்டர் இடைவெளியில் ஸ்ரீசங்கரா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. கடை அமைய உள்ள இடத்தில், தெற்கு பக்கம் 300 மீட்டர் இடைவெளியில், ஊத்துக் காட்டம்மன் கோவில் உள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அரசு நடைமுறை விதிகளுக்கு உட்பட்டுள்ளது என, வருவாய் ஆய்வாளர் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்தில், மதுபானக் கடை அமைக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் கடை திறந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடம், நிலையத்தில் இருந்து பேருந்து வெளியே வரும் வழி அருகிலேயே உள்ளது. அங்கு கடை திறந்தால் நெரிசல் ஏற்படும்.
எனவே பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என, பல்வேறு அமைப்புகள் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.