/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திய ஆசிரியர் கைது
/
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்திய ஆசிரியர் கைது
ADDED : செப் 10, 2024 12:40 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, வண்ணாரப்பேட்டை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தை விட்டு சந்தேகத்திற்கிடமான வகையில் வெளியேற முயன்ற வாலிபரை மடக்கி, சோதனை மேற்கொண்டனர்.
இதில், பிடிபட்ட நபர் மதுரையைச் சேர்ந்த அரவிந்த் சாமி, 29, என்பதும், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர், போதிய வருமானம் இல்லாததால் வேலையை விட்டு நின்றதும் தெரிய வந்தது. இந்த நிலையில், விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
மேலும், சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றால், போலீசில் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், பயணியர் விரைவு ரயில், மெதுவாக செல்லும் போது, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும் தெரிய வந்தது.
அவரிடம் இருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார்.