/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
/
3வது மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி
ADDED : ஆக 09, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசோக் நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் தேவா, 27; டெக்கரேஷன் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில், மாடி குடியிருப்புக்கு சென்றார். அப்போது, நிலை தடுமாறி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில், தேவாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; கை, கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.