/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
/
குடிநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : செப் 01, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர்:திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ், 26. காரப்பாக்கத்தில் தங்கி, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று காலை, 'ராயல் என்பீல்ட்' இருசக்கர வாகனத்தில், பணிக்கு புறப்பட்டார். ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த குடிநீர் லாரி மோதியது.
இதில், சாலை மைய பகுதியில் மெட்ரோ ரயிலுக்காக வைத்த இரும்பு தடுப்பில் மோதி, குடிநீர் லாரி பின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனர் பழனி, 47, என்பவரை கைது செய்தனர்.