/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
/
கஞ்சா விற்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
ADDED : பிப் 26, 2025 12:17 AM
சென்னை, கிண்டி அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபருக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கிண்டி பேருந்து நிலைய பகுதியில், 2013 ஜூன், 13ல் கஞ்சா விற்பதாக, அடையாறு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கஞ்சா விற்ற திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரைச் சேர்ந்த சரவணன், 35, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன் நடந்து வந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சரவணன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.