/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயன்பாடற்ற குடிநீர் தொட்டியால் கோவில் வளர்ச்சி பணிக்கு இடையூறு
/
பயன்பாடற்ற குடிநீர் தொட்டியால் கோவில் வளர்ச்சி பணிக்கு இடையூறு
பயன்பாடற்ற குடிநீர் தொட்டியால் கோவில் வளர்ச்சி பணிக்கு இடையூறு
பயன்பாடற்ற குடிநீர் தொட்டியால் கோவில் வளர்ச்சி பணிக்கு இடையூறு
ADDED : ஜூன் 12, 2024 12:19 AM

பள்ளிக்கரணை,மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த வீராத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற குடிநீர் தொட்டியால், கோவில் வளர்ச்சி பணிகள் மற்றும் கோபுரம் கட்டும் பணிகளுக்கு தடை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவில் பக்தர்கள் கூறியதாவது:
பள்ளிக்கரணையில் மிகப் பழமையான வீராத்தம்மன் கோவில் உள்ளது. இந்த ஊர் எப்போது உருவானதோ, அப்போதிலிருந்தே இக்கோவில் உள்ளதால், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடையதாக இக்கோவில் அறியப்படுகிறது.
கடந்த 1975ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், ஆதிபுரீஸ்வரர் ஆகிய திருக்கோவில்களுடன் வீராத்தம்மன் கோவிலையும், ஹிந்து சமய அறநிலையத்துறை, தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது, 1986ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி, வீராத்தம்மன் கோவில் உள்ளே அமைக்கப்பட்டது.
பின், பேரூராட்சியாக பள்ளிக்கரணை தரம் உயர்த்தப்பட்டபோது, அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதால், 2001ம் ஆண்டு முதல் குடிநீர் தொட்டியில் நீரேற்றுவது மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு, ஒருகட்டத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது. சென்னை மாநகராட்சி, 14 வது மண்டலம், 189வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிக்கரணையில் இக்கோவில் உள்ளது.
2010ம் ஆண்டு முதல், பன்னிரெண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. தவிர, தொட்டியின் மேற்பகுதி சேதமடைந்தும் உள்ளது. இதனால் விபத்து அச்சமும் உள்ளது.
எனவே, பயன்பாடற்ற இந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தினால், கோவில் வளர்ச்சி பணிகளுக்கு உரிய இடம் கிடைப்பதோடு, கோவில் கோபுரம் கட்டுவதற்கும் உரிய இடவசதி கிடைக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வீராத்தம்மன் கோவில் வளாகம் உள்ளே பயன்பாடு இல்லாமல், பாழடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி, கோவிலின் வளர்ச்சி பணிகளுக்கும், கோபுரம் கட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.