/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளியூர் தப்ப முயன்ற குற்றவாளி திருமங்கலம் போலீசில் ஒப்படைப்பு
/
வெளியூர் தப்ப முயன்ற குற்றவாளி திருமங்கலம் போலீசில் ஒப்படைப்பு
வெளியூர் தப்ப முயன்ற குற்றவாளி திருமங்கலம் போலீசில் ஒப்படைப்பு
வெளியூர் தப்ப முயன்ற குற்றவாளி திருமங்கலம் போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 30, 2024 12:19 AM
சென்னை, எதிரிகளை தீர்த்துக்கட்ட, துப்பாக்கிகளுடன் சுற்றி வந்த ரவுடிகளை, சென்னை, திருமங்கலம் பகுதியில் போலீசார் கடந்த மார்ச் மாதம் கூண்டோடு கைது செய்தனர்.
இவ்வழக்கில், அரக்கோணத்தை சேர்ந்த 'ஒற்றைக்கண்' ஜெயபால், 64, வேளச்சேரி பிரசன்னா, 30, உள்ளிட்ட 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள், 14 தோட்டாகளை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் கைதான நீலாங்கரையை சேர்ந்த வசந்த் டேவிட், 29, என்பவர், ஜாமினில் வெளிவந்உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, வெளியூர் செல்லவதற்காக சென்னை விமானநிலையம் வந்தார்.
வசந்த் டேவிட் மீது, 'லுக் அவுட்' நோட்டீஸ் இருந்ததால், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விமான நிலையத்திற்கு சென்ற திருமங்கலம் போலீசார், அவரை பிடித்து விசாரித்த போது, தொழில் ரீதியாக வெளியூர் செல்வதாக தெரிவித்துள்ளார்.
வழக்கு முடியும் வரை வெளியூர் செல்ல கூடாது என, போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.