/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
120 நாடுகளின் கொடிகளை 70 நிமிடத்தில் வரைந்த சிறுவன்
/
120 நாடுகளின் கொடிகளை 70 நிமிடத்தில் வரைந்த சிறுவன்
120 நாடுகளின் கொடிகளை 70 நிமிடத்தில் வரைந்த சிறுவன்
120 நாடுகளின் கொடிகளை 70 நிமிடத்தில் வரைந்த சிறுவன்
ADDED : ஏப் 02, 2024 12:22 AM

சென்னை, நினைவாற்றலால், 120 நாடுகளில் கொடிகளை, 70 நிமிடத்தில் வண்ணத்துடன் வரைந்து, 8 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
மதுரவாயல் பகுதியை சேர்ந்த, ராஜா மோகன் மற்றும் நளினி தம்பதியின் மகன் ஆர்.சாத்விக், 8. இவர், அம்பத்துாரில் உள்ள வேலம்மாள் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
சாத்வீக், தன் நினைவாற்றல் திறமையால், இந்தியா, அமெரிக்கா உட்பட 120 நாடுகளில் கொடிகளை, 70 நிமிடத்தில், அதன் நிறங்களுடன் வண்ணம் தீட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனையை, கலாமின் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து, சான்றிதழை வழங்கியது.
இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் கூறியதாவது :
சாத்விக், தன் 3 வயதில் இருந்து, ஓவியத்தில் திறமையுள்ளவன். கொடிகளை அடையாளம் காட்டி அசத்திய திறமையை கண்டு வியந்தோம். பின், ஐந்து கொடிகளை நினைவாற்றலால் வரைந்து வண்ணம் தீட்டினார்.
அவரது திறமையை கண்டறிந்து, பயிற்சி கொடுத்தோம்.
தற்போது, எதையும் பார்க்காமல், 120 நாடுகளில் கொடிகளை, 70 நிமிடத்தில் வரைந்து சாதனை படைத்தார். கொடிகளில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையையும் துல்லியமாக கணக்கிட்டு வரைந்து புதிய சாதனை படைத்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

