/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணமகன் திடீர் மாயம் பாதியில் நின்ற திருமணம்
/
மணமகன் திடீர் மாயம் பாதியில் நின்ற திருமணம்
ADDED : செப் 16, 2024 02:20 AM
திருத்தணி:அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 29. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் அனுஷா, 29. இருவரும் பெங்களூருவில் ஒரே வங்கியில் பணிபுரிந்து வருகிறனர். இவர்கள் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களது திருமணம் திருத்தணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை 7:30 மணியளவில் நடக்கவிருந்தது. நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி, அதே மண்டபத்தில் நடந்தது.
இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மணமகன் ஸ்ரீதர் திடீரென மாயமாகி இருந்தார். இதையடுத்து திருமணம் நின்றது.
திருத்தணி போலீசில் அனுஷா அளித்துள்ள புகாரில் 'மணமகன் திடீரென மாயமானதில் சந்தேகம் உள்ளது. நாங்கள் வேறு வேறு சமூகம் என்பதால் மணமகனை வேண்டும் என்றே, அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளனர்' என, குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.